Thursday, 1 December 2016

தாய்மை 

வலி  பொறுத்து 
விழி நனைத்து 
வழி விடுத்து 
உயிர் கொடுத்து 
துயில் தொலைத்து 
 தோள் கொடுத்து 
உத்திரத்தில் பால் பிரித்து 
அதரத்தில் அதை நனைத்து 
ஆனந்தம் அடைந்த தருணம் அது!